வட மாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து கலந்துரையாடல்

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், கூட்டமைப்பின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம்  நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்ற போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதற்கமைய எதிர்வரும் 14 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயம் தொடர்பில் கூடி ஆராய்வார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here