வரட்சியினால் பாதிக்கப்பட்டோருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்!

வடக்கு, கிழக்கில் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாகநிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்இரா. சம்பந்தன் இன்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தம் தொடர்பாக இன்று இடம்பெறும்சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர்மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

வடக்கு, கிழக்கில் கடும் வரட்சி காணப்படுகிறது. அரசாங்கம் இந்த விடயம் தொடர்பில்கவனம் செலுத்தி பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியான நிவாரணங்களை வழங்க வேண்டும்என சம்பந்தன் கூறியுள்ளார்.

அத்துடன், இயற்கை அனர்த்தங்களின்போது முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை வினைத்திறன்மிக்கதாக மேற்கொள்ள மாகாண மற்றும் மாவட்ட ரீதியில் அதிகாரங்கள் பகிரப்படவேண்டியது முக்கியம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here