வருகிறது புதிய கடும் சட்ட நடவடிக்கை

நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண கால நிலையின் காரணமாக டெங்கு நோயின் தாக்கம் பாரியளவில் அதிகரித்துள்ளது. நாடளாவிய ரீதியில் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 59 ஆயிரத்து 760 பேர் டெங்கு நோயாளர்களாக கண்டறியப்பட்டுள்ளதுடன் 153 பேர் குறித்த நோயினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மேல் மகாணத்திலேயே பெருமளவிலான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் டெங்கு நோய் தொற்று பரவும் வகையிலான சூழலை வைத்திருப்போருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளமை தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here