அமரதுங்கவின் அடாவடித்தனம் குறித்து ஊடக அமைப்பு கடும் கண்டனம்

செய்தி சேகரிக்கச்சென்றிருந்த இரண்டு ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி வெளியேற்றிய அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் அடாவடித்தனம் குறித்து ஊடகஅமைப்பொன்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கொழும்பு நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை வத்தளைப் பிரதேசத்தில் கொட்டுவது குறித்து சூழல் பாதுகாப்பு அமைப்புகளும், பொதுமக்களும் இணைந்து நேற்றைய தினம் அமைச்சர் ஜோன் அமரதுங்கவிடம் நேரில் தமது எதிர்ப்பை வெளிக்காட்டியிருந்தனர்.

குறித்த சந்தர்ப்பத்தில் செய்தி சேகரிக்கச் சென்றிருந்த இரண்டு செய்தியாளர்களுக்கு கடுமையான வார்த்தைகளால் திட்டி அச்சுறுத்தல் விடுத்திருந்த அமைச்சர் ஜோன் அமரதுங்க, அவர்களை பலவந்தமாக குறித்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தியிருந்தார்.

இதுகுறித்து இலங்கை தேசிய ஊடகவியலாளர் சம்மேளனம் தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது. அமைச்சரின் செயல் பொதுமக்களுக்களின் குரலாக செயற்படும் ஊடகங்கள் மீதான பாரிய அச்சுறுத்தல் என்று ஊடகவியலாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் தகவல் அறியும் சட்டத்தை கொண்டுவந்துள்ள அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவரே இவ்வாறு நடந்து கொள்வது அரசாங்கத்துக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் விடயம் என்றும் குறித்த கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here