இந்திய பிரதமர் மோடியை ஏமாற்றிய இலங்கையர்கள்!

இந்திய அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்டின் கீழ் டிக்கோயா வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த மாதம் 12ம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, டிக்கோயா வைத்தியசாலை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

எனினும் இந்த வைத்தியசாலை முழுமையாக நிறைவு செய்வதற்கு முன்னர் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

வைத்தியசாலையை திறக்கும் போது அதற்கு தேவையான எந்தவிதமான பொருட்களும் கொள்வனவு செய்யப்பட்டிருக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எனினும் அந்த சந்தர்ப்பத்தில் வேறு வைத்தியசாலைகளில் இருந்த நோயாளர்களின் கட்டில்கள் மற்றும் உபகரணங்கள் டிக்கோயா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பல வாரங்கள் கழித்து மீண்டும் அந்த உபகரணங்கள் உரிய வைத்தியசாலைகளுக்கு இரகசியமான முறையில் மாற்றப்படுவதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இவற்றில் அதிகமானவைகள் தெல்தெனிய ஆரம்ப வைத்தியசாலையில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

20 அம்பியுலன்ஸ் வண்டிகள், வைத்தியசாலை நோயாளிகளின் மருந்துகளை வைக்கும் லொக்கர்கள் மற்றும் கட்டிலுக்கு அருகில் வைக்கும் அலுமாரிகளும் அதற்குள் உள்ளடக்கப்படும்.

இவற்றில் சில தெல்தெனிய வைத்தியசாலையினால் டிக்கோயா வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டவைகள் எனவும் பெரும்பான்மையானவை கடனுக்கு பெற்றுக் கொள்ளப்பட்டவை என குறிப்பிடப்படுகின்றது.

டிக்கோயா வைத்தியசாலை நிர்மாண பணிக்காக இந்திய அரசாங்கத்தினால் 1200 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. எனினும் வைத்தியசாலைக்கு தேவையான அடிப்படை வசதிகள் கூட இன்னும் முறையாக ஏற்படுத்தப்படவில்லை என குறித்த ஊடகம் குற்றம் சாட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here