கல்வி கலாச்சார நிலையம் தாக்கப்பட்டமை தொடர்பில் 4 சந்தேகநபர்கள் கைது!

ஓட்டமாவடி – மீராவோடையிலுள்ள அகில இலங்கை அஹ்லுல் பைத் ஜமாத்தின் (ஷியா அமைப்பின்) கல்வி கலாச்சார நிலையத்தை தாக்கிய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கல்வி கலாச்சார நிலையம் தாக்கப்பட்டதாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுனுவ தெரிவித்தார்.

மேற்படி கலாச்சார நிலையம் கடந்த வியாழக்கிழமை இரவு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்னும் சில சந்தேக நபர்களையும் தேடி வருவதாக அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here