குடாநாட்டுக்கு கடத்தப்படவிருந்த 56 கிலோ கேரள கஞ்சா மீட்பு!

யாழ்.தொண்டமானாறு பகுதி ஊடாக குடாநாட்டுக்குள் கொண்டுவருவதற்கு தயார்படுத்தப்பட்டிருந்த 56 கிலோ கேரள கஞ்சா மற்றும் குறித்த கஞ்சாவை கடத்த முயன்றதாக சந்தேகிக்கப்படும் இரு சந்தேகநபர்களையும் இலங்கை கடற்படையின் கடலோர காவற்துறை கைது செய்துள்ளது.

இன்றைய தினம் அதிகாலை தொண் டமானாறு கடற்பகுதியில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.

தண்ணீர் புகாத வண்ணம் பொதி செய்யப்பட்ட நிலையில் குறித்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மீட்கப்பட்ட 56 கிலோ கஞ்சா மற்று ம் சந்தேக நபர்களை அச்சுவேலி பொலிஸாரிடம் கடலோர கவால்படையினர் கையளித்துள்ளனர்.

இதேவேளை நேற்றைய தினம் இலங்கை கடலோர காவல் படையினரால் 5.6 கிலோ ஹெரோயின் காங்கேசன் துறை கடற்பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here