கோட்டைகட்டியகுளம் அ.த.க.பாடசாலை வடமாகாணத்தில் சாதனை

கோட்டைகட்டியகுளம் அ.த.க.பாடசாலை வடமாகாணத்தில் சாதனை
08.06.2017 அன்று ஓமந்தை மத்தியகல்லூரியில் நடைபெற்ற 17 வயதுப்பிரிவு எறிபந்தாட்டப்போட்டியில் முல்லைத்திவு கோட்டைகட்டியகுளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை வடமாகாணத்தில் சாதனை படைத்துள்ளது.
 வட மாகாணத்தின் பிரபல பாடசாலைகள் பல கலந்து கொண்ட போட்டியில் கோட்டைகட்டியகுளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை அணி இரண்டாம்  இடத்தைப்பெற்றுள்ளது. இவற்றால் பாடசாலையினுடைய பழையமாணவர்கள் பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.
அண்மைக்காலமாக இந்தப்பாடசாலை விளையாட்டுக்களில் சாதனைகள் படைத்து வருவவதுடன் பாடசாலையினுடைய 43 வருட வரலாற்றில் முதற்தடவையாக பெருவிளையாட்டுக்களில் தேசிய விளையாட்டுக்களில் தேசியரீதியில் பங்குபெறுவதற்கான வாய்ப்பைப்பெற்றுள்ளது. இந்தப் பாடசாலையின் பயிற்றுவிப்பாளராக பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர் வேலாயுதம் திவாகரன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here