சீரற்ற காலநிலையால் 30 ஆயிரம் ஏக்கர் தேயிலைச்செய்கை நாசம்

சீரற்ற காலநிலையால் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் தேயிலைச்செய்கை நாசமடைந்திருக்கின்றது என சிறுதேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் சங்கம் விசனம் தெரிவித்துள்ளது.

இந்த 30 ஆயிரம் ஏக்கரில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் முற்றாக சேதமடைந்திருப்பதாக அச்சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான லால் பிரேமநாத் கூறியுள்ளார்.

இவ்வளவு சேதங்கள் ஏற்பட்டுள்ளபோதிலும் தங்களுக்கு எவ்வித நிவாரணமோ நட்ட ஈடோ இதுவரை அரசால் வழங்கப்படவில்லை எனவும், சேதமடைந்துள்ள சில பகுதிகளில் மீண்டும் தேயிலையைப் பயிர்செய்ய சில வருடங்கள் எடுக்கும் எனவும், காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலேயே அதிக சேதம் ஏற்பட்டிருக்கின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here