தெருக்களில் முடக்கப்பட்டுள்ள மக்கள் : டக்ளஸ்

தவறான அரசியில் வழிநடத்தல்கள் காரணமாக இன்று இருக்கின்ற மனித வளமும், வேலை வாய்ப்புகளுக்காகவும், சொந்த காணி நிலங்களுக்காவும், காணாமல் போனவர்களை கண்டறிவதற்குமாக நடு தெருக்களில் மக்கள் முடக்கப்பட்டுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்றுள்ள கலந்துரையாடலின் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

எமது நாட்டில் உற்பத்தி துறைகள் ஊக்குவிக்கப்பட்டு அவை பரவலாக கட்டி எழுப்பப்படுவதன் ஊடாகவே நாட்டை பொருளாதார ரீதியிலும் பல மிக்கதாகவும் கட்டியெழுப்ப முடியும்.

இந்த வகையில் எமக்கான உற்பத்தி துறையின் வளர்ச்சிக்கு மற்றுமொரு தடையாக இருப்பது தரம் குறைந்த பொருட்களின் இறக்குமதி என நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here