நிலக்கடலை அறுவடை விழா

கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் இவ்வருடத்திற்கான தேசிய உணவு உற்பத்தி செயற்திட்டத்தின் கீழ் வர்த்தக ரீதியிலான விதை நிலக்கடலை உற்பத்தியும் அறுவடை விழாவும் இடம்பெற்றுள்ளது.

குறித்த விழா கிழக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் கலாநிதி ஹுசைன் தலைமையில் மாவடியோடை, புத்தம்புரி பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் கலந்து கொண்டு நிலக்கடை அறுவடையை ஆரம்பித்து வைத்தார்.கிழக்கு மாகாண விவசாய அமைச்சரின் வழிகாட்டுதலின் கீழ் விவசாயத் திணைக்களத்தின் தேசிய உணவு உற்பத்தித் திட்ட செயற்பாடாக மேற்படி பிரதேசத்தில் நிலக்கடலை உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது.

இந்த விழாவில், அதிதிகளாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் எஸ்.சிவநாதன், விவசாயத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் றொஹான் விஜேகோன் மற்றும் பல அதிதிகள், பிரதேச விவசாயிகள், அதிகாரிகள், பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here