“நீந்தி கடந்த நெருப்பாறு” நூல் வெளியீட்டு விழா!

நா.யோகேந்திரனால் எழுதப்பட்ட “நீந்தி கடந்த நெருப்பாறு” நூல் வெளியீட்டு விழா இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.

கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா கலந்து கொண்டார்.

அத்தோடு அதிதிகளாக வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், வடமாகாண சபை உறுப்பினர்களான பசுபதிப்பிள்ளை, அரியரத்தினம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் குறித்த நிகழ்வின்போது நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், குருகுலராஜா, ஐங்கரநேசன் ஆகியோர் சிறப்புரை ஆற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here