புற்றுநோயில் பாதிக்கப்பட்ட மூன்று பிள்ளைகளின் தந்தை தூக்கிட்டு தற்கொலை

மட்டக்களப்பில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

நாவற்குடா, மேல்மாடித் தெருவில் வசிக்கும் 50 வயதான சின்னத்தம்பி தர்மலிங்கம் என்பவரே நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் அவர்களது உறவினர்கள் தெரிவிக்கையில்,

மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் கடந்த 6 மாதங்களாக புற்றுநோயால் பெரிதும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

கடந்த இரண்டு மாதங்களாக நோயின் தாக்கம் அதிகரித்ததனால் உணவு உட்கொள்வதிலும் பெரிதும் கஷ்டப்பட்டு வந்தார்.

இந்த நிலையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here