மாத்திரைகளை உட்கொண்டு உயிரிழந்த 4 வயது சிறுமி

கம்பஹா பிரதேசத்தை சேர்ந்த 4 வயது சிறுமி ஒருவர் மாத்திரைகளை உட்கொண்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சிறுமியின் சடலம் நேற்று கம்பஹா மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலேயே இது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கனேமுல்லை, பஹலியாகொட பிரதேசத்தை சேர்ந்த சிறுமி தனது தாய் வாங்கி வைத்திருந்த மாத்திரைகளை உட்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் இந்த விடயம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அந்த மருந்தில் உள்ளடக்கப்பட்டிருந்த அதிகளவான இரும்புச்சத்து உடலில் சேர்ந்தமையினால் மரணம் சம்பவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here