வவுனியாவில் வீதி சமிச்சை இனந்தெரியாத நபர்களினால் சேதம்

வவுனியாவில் வீதி சமிக்ஞை நேற்றிரவு இனந்தெரியாதோரால் சேதமாக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

கோவிற்குளம் – சிதம்பரபுரம் பிரதான வீதியில் அமைந்துள்ள சமளங்குள பாலத்தில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலேயே பாலத்திற்கு அருகிலுள்ள வீதி சமிச்சை சேதமாக்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த இனந்தெரியாத நபர்கள் பாலத்தின் தூண்கள், வீதி சமிச்சை குறியீட்டு பலகை, பாலத்தில் கீழ் மண்ணில் பதிக்கப்பட்ட புற்கள் என்பவற்றை சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த இடத்தில் நின்று நேற்று இரவு இளைஞர்கள் மதுபாவனையில் ஈடுபட்டுள்ளதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here