வவுனியா பூந்தோட்டம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயம்

வவுனியா, பூந்தோட்டம் வீதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, பூந்தோட்டம் வீதியில் பூந்தோட்டம் சந்திக்கு அருகில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் எதிரே வந்த வேன் ஒன்றும் மோதியமையினால் குறித்த விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே காயமடைந்துள்ளதோடு காயமடைந்த இருவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here