வெளிவிவகார அமைச்சின் கீழ் லொத்தர்சபை

வெளிவிவகார அமைச்சின் கீழ் லொத்தர் சபை வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் அமைச்சரவையில் செய்யப்பட்ட மாற்றங்களின் போது நிதி அமைச்சு வெளிவிவகார அமைச்சு ஊடக அமைச்சு உள்ளிட்ட சில முக்கிய அமைச்சுக்களில் மாற்றம் செய்யப்பட்டது.

நிதி அமைச்சராக கடமையாற்றி வந்த ரவி கருணாநாயக்க வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த அமைச்சு மாற்றங்களின் அடிப்படையில் வர்த்தமானியில் அமைச்சுக்கான பொறுப்புக்கள் மற்றும் துறைசார் நிறுவனங்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.

இதுவரையில் நிதி அமைச்சின் கீழ் இங்கிய தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை ஆகிய இரண்டுமே தற்போது வெளிவிவகார அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

ரவி கருணா கேட்டுக் கொண்டதற்கு அமைய இவ்வாறு லொத்தர்சபை போன்ற நிதி நிறுவனங்கள் இம்முறை வெளிவிவகார அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here