ஜனாதிபதி மீண்டும் யாழ். விஜயம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

அமைச்சர்கள் தொடர்பான மோசடி குற்றச்சாட்டு விசாரணை அறிக்கை வெளியாகி வட மாகாண அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நாளைய தினம் ஜனாதிபதி அங்கு விஜயம் செய்யவுள்ளார்.

ஜனாதிபதியின் யாழ். விஜயம் தொடர்பாக மாகாண ஆளுநர் அலுவலகம் மற்றும் மாவட்ட செயலகத்திற்கு நேற்று காலை தொலைபேசியூடாக தகவல் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நாளை காலை 10 மணிக்கு, மாவட்டத்தின் சிறப்பு அபிவிருத்திக் குழுக் கூட்டம், ஜனாதிபதியின் பங்கேற்புடன் நடைபெற உள்ளது.

இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை ஜனாதிபதி சந்தித்திக்கவுள்ளார். இந்த சந்திப்பு நாளை பிற்பகல் 2 மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here