துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கைது

பிலியந்தலை துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ரம்புக்கனை பிரதேசத்தை சேர்ந்த 49 வயது மதிக்கத்தக்கவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் சந்தேகநபர் கெக்கிராவ பஸ்தரிப்பு நிலையத்திற்கு அருகில் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளைக் கொள்வனவு செய்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதேவேளை சந்தேகநபர் இன்று கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

கடந்த மாதம் 9 ஆம் திகதி பிலியந்தல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் போதைப்பொருள் ஒழிப்பு பொலிஸ் அதிகாரியொருவரும் 11 வயதான சிறுமியொருவரும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here