நாடு இல்லை என்றால் தமிழர்கள் நாதியற்றவர்கள் என்று நினைக்காதீர்கள்!

நாடு இல்லை என்பதற்காக தமிழர்களை நாதியற்றவர்கள் என்று நினைத்துவிட வேண்டாம் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

சிறுபான்மையினராக வாழும் தமிழர்கள் சற்று அசந்துவிட்டால், அவர்களை ஆட்கொண்டு விடுவார்கள்.

தாய் மொழி, கலாசாரம், இனம், பண்பாடு, வரலாற்றை மறந்துவிட்டுத்தான் நாட்டில் ஒற்றுமையை உருவாக்க வேண்டும் என்றால், அப்படியொரு ஒற்றுமை எமக்கு வேண்டாம்.

நாடு இல்லை என்பதற்காக தமிழர்களை நாதியற்றவர்கள் என்று நினைத்துவிட வேண்டாம் என்று குறிப்பிட்ட அவர்,

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட போது, தமிழகத்தில் செம்மொழி மாநாடு நடத்தப்பட்டது. தமிழ் மொழியை வாழ வைக்க வேண்டுமானால் தமிழர்கள் வாழ வேண்டும்.

தமிழர்கள் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்டபோது கண்ணை மூடிக்கொண்டு இருந்துவிட்டு, பிறகு செம்மொழி மாநாட்டை நடத்துவதால் மட்டும் தமிழ் மொழி வாழ்ந்து விடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here