மட்டக்களப்பில் பாலங்கள் அமைக்கும் பணிகள் ஆரம்பம்

வவுணதீவு – புளியடிமடு பாலம் சேதமடைந்து பாதுகாப்பற்றதாக காணப்பட்ட நிலையில், அதன் அமைப்பு பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த பாலத்தை அமைப்பது தொடர்பாக கடந்த ஒன்பதாம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் சிறீநேசனால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலையடுத்தே இந்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறீநேசன் தெரிவிக்கையில்,

இந்த செயற்திட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்கிய உள்ளூராட்சி உதவி ஆணையாளர், மாகாண உள்ளூராட்சிப் செயற்றிட்டப் பொறியியலாளர் ஆகியோருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அத்தோடு ‘கிராம மக்களின் போக்குவரத்தினை இலகுபடுத்தல்’ எனும் திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்திற்காக கடந்த வருடம் முன்மொழியப்பட்ட 32 கிராமியப் பாலங்களை அமைக்கின்ற செயற்பாடுகள் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சினூடாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், வக்கியல, கண்ணபுரம், கெவிளியாமடுக் கிராமங்களில் 05 பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளதை அதிகாரிகள் வெளிப்படுத்தினர். மேலும், 08 பாலங்களை அமைப்பதற்கான ஆயத்த வேலைகள் செய்யப்பட்டு வருகின்றன.அதேவேளை 09 கிராமியப் பாலங்கள் வடிவமைக்கப்டபட்டு தயார் நிலையிலுள்ளன என அவர் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here