மத்தள விமானநிலையத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்ய முயற்சி!

நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தத்தின் பால் மக்களின் கவனம் திரும்பியுள்ள சூழலில் அரசாங்கம் திருட்டுத்தனமாக நாட்டு வளங்களை விற்பனை செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

மத்தள விமானநிலையத்தின் 60 சதவீத பங்கை இந்தியாவுக்கு விற்பனை செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் அடுத்த வாரமளவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அவ்வாறு அரசாங்கம் செய்யுமாயின் அது நாட்டுக்கு செய்யும் பாரிய துரோகமாகும் என பா.உ. பந்துல குணவர்தன தெரிவித்தார்.

தேசிய வளங்கள் சம்பந்தமாக அரசாங்கத்தின் கொள்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சர்வதேச விமான நிலையமாகவுள்ள மத்தள விமானநிலையத்தின் பொருளாதாரமான நிலையத்தின் அதிகளவான பங்கு எந்தவொரு வெளிநாட்டுக்கும் வழங்கப்படுமாயின் அதனை கூட்டு எதிர்க்கட்சி வன்மையாக எதிர்க்கும்.

எனவே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேசிய சொத்துக்களை தனியார் மயப்படுத்த வேண்டுாம் என ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கிறோம்.

ஏனெனில் ஜனாதிபதியின் பிரசன்னத்துடன் இடம்பெறுமத் பொருளாதார குழுக் கூட்டத்தின் போதே இவ்வாறான திட்டங்கள் தீர்மானிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here