நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் வடமாகாண ஆளுநர் தகவல்

வட மாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சபையில் சமர்ப்பித்து, விவாதம் நடத்துவதற்கான திகதி குறித்து உறுதியான தீர்மானமொன்றை மேற்கொள்ளவில்லை என வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து தீர்மானம் எடுப்பது தொடர்பில் தொடர்ந்தும் ஆராயந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

வட மாகாண சபையில் முதலமைச்சருக்கு எதிராக ஒரு தரப்பினரும், ஆதரவாக மற்றுமொரு தரப்பினரும் செயற்பட்டு வருவதால் அவர்கள் இரு தரப்பினரதும் கருத்துக்களை முழுமையாக உள்வாங்கி ஆராய வேண்டும் என ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, எதிர்வரும் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ள வட மாகாண சபை அமர்வில் சமர்ப்பிக்கப்படும் என சிலர் கூறுகின்றனர்.

எனினும், நம்பிக்கையில்லா பிரேரணையை சபையில் சமர்ப்பிக்கும் திகதி குறித்து தற்போதுவரை இறுதி முடிவொன்றுக்கு வரவில்லை என்று ரெஜினோல்ட் குரே கூறியதாக வார இதழொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here