ஆளுமை சமூகத்திற்கு பயன்படுகின்ற போதே முழுமையடைகிறது.

 ஆளுமை சமூகத்திற்கு பயன்படுகின்ற போதே முழுமையடைகிறது முன்னாள் எம்பி சந்திரகுமார் 

ஒவ்வொருவரிடமும் காணப்படுகின்ற ஆளுமை பண்புகள் அதன் திறமைகள் சமூகத்திற்கு பயன்படுகின்ற போதே அது முழுமையடைகிறது என சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மு.சந்திரகுமார்  தெரிவித்துள்ளார் .
நேற்று  சனிக்கிழமை கிளிநொச்சி திருநகர் கல்வி பண்பாட்டு அபிவிருத்தி மன்றத்தில் லண்டன் லிட்டில் எய்ட் மற்றும் திங் டு வைஸ் நிறுவனத்தின் அமைப்பினரால் நடத்தப்படுத்தப்பட்ட ஆளுமை விருத்தி கல்விச் செயலமர்வூம் அதன் அறிமுக நிகழ்வூம் இடம்பெற்றது இதில் கலந்துகொண்டு கருத்துதெரிவித்த  போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்
 
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
கல்வி வளர்ச்சியில் இலங்கையிலேயே கிளிநொச்சி மாவட்டம் கடைசி நிலையில் உள்ளது துரதிஸ்ரவசமானது. பின்னோக்கிச் செல்லும் கல்வியை மேம்படுத்த வேண்டும் இந்த மாவட்டத்தின் கல்வி நிலை கீழ்மட்டத்தை நோக்கி செல்வதை காப்பாற்ற வேண்டும் என்கின்ற ஆர்வம் கல்வி சார்ந்த எல்லோருக்கும் உள்ளது. ஆனால்இ அதனை எப்படி மாற்றியமைத்து முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டும் என்பது தொடர்பாக எங்களுக்குள் நிறைய வேற்றுமைகள் காணப்படுகின்றன.
 
அந்த வேற்றுமைகள்தான் தொடர்ந்தும் இந்த மாவட்டத்தின் கல்வியை மேம்படுத்த முடியாததற்கான பிரதான காரணமாக தடையாக காணப்படுகின்றது என நான் கருதுகின்றேன். கல்வி அமைச்சின் செயலாளர் ரவீந்திரன் இங்கிருக்கின்றார் இந்த மாவட்டத்தின் கல்வி நிலை தொடர்பாக நன்கு அறிந்தவர்.
அவர்  மாகாணத்தின்  கல்வியை மேம்படுத்துவதற்கு பல நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும் கூட நடைமுறையில் பின்பற்றுவதில் அவரும் சவால்களை எதிர்கொள்கின்றார். ஆனால் இனி அந்த சவால்கள் குறைந்துவரும் என நினைக்கின்றேன்
கிராமப்புறங்களின் கல்வி நிலைமை மிகவும் மோசமாக காணப்படுகின்றது. ஆசிரிய வளப்பற்றாக்குறை இருகின்றது. மாகாணத்தின் பட்டியலில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு திருப்திகரமான ஆசிரிய வளம் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், உண்மை அதுவல்ல. போதுமான ஆசிரியர் வளம் வழங்கப்பட்டாலும் முக்கியமான பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை தொடர்ந்தும் நிலவி வருகிறது. எனத் தெரிவித்த சந்திரகுமார்
 
வடமாகாணத்தின் கல்வி நிலை கவலைக்கிடமாக சென்றுகொண்டிருக்கின்றது. தென்னிலங்கையில் கல்வியில் பின்னிலையில் காணப்பட்ட பல மாவட்டங்கள் தற்போது வேகமாக வளர்ந்துவருகின்றன. ஆனால் நாங்கள் இன்றும்  யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாகாணம் என்று சொல்லிக்கொண்டு கல்வியின் பின்னடைவை நியாயப்படுத்திக்கொண்டிருக்கின்றோம். யுத்தத்தின் பாதிப்புகளின் பிரதிபலிப்பை சவாலாக எடுத்துக்கொண்டு நாம் முன்னேற வேண்டும். எனவும் தெரிவித்த சந்திரகுமார்,
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் வெளியேறுகின்றனர். ஆனால், பல்கலைக்கழகம் எவ்வளவு தூரம் பட்டதாரிகளை ஆளுமை விருத்தி உள்ளவர்களாக உருவாக்கி விடுகின்றது என்பதில் பல விமர்சனங்கள் உள்ளன.
மேலும் யுத்தத்தில் குறிப்பாக பெண்கள் மிகவூம் வரலாறு படைத்த பூமி இது ஆனால் யுத்தத்திற்கு பின்னர் இதே மண்ணில் பெண்களின்  ஆளுமை விருத்தி குறைவாகக் காணப்படுகிறது. இது கவலைக்குரிய விடயம். ஒவ்வொருவரிடமும் காணப்படுகின்ற ஆளுமைகள்  சமூகத்திற்காக பயன்படுத்தப்படும் போது தான் அது மக்களுக்கும் பயனுள்ளதாக மாறுகிறது. எனத் தெரிவித்த அவர்
இந்தக் ஆளுமை விருத்தி செயலமர்வு தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும். பெண்களின் பங்களிப்பு அதிகமாக வளரவேண்டும் தற்போதும் கூட பாடசாலைகளில் அதிக மதிப்பெண்களைப் பெறுபவர்கள் மாணவிகள்தான். அதேபோன்று பல துறைகளில் உயர் பதவிகளில் உள்ளவர்களும் பெண்கள்தான். இந்தப் பலம் அரசியலிலும் வரவேண்டும். பெண்களின் பிரச்சினைகளைப் பார்ப்பதற்கு பெண் அரசியல் தரப்பு எங்களிடத்தில் போதுமானதாக இல்லை எனவும் குறிப்பிட்டார்
இந்த நிகழ்வில்  வடக்கு மாகாண கல்வி  அமைச்சின் செயலாளர் இராசா இரவீந்திரன் இலங்கை தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் சேர்ந்த ரட்ண ஜீவன் கூல், வடமாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் திருமதி பி.செல்வின்,  முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சுந்தரம் டிவகலாலா, டான் தொலைக்காட்சி குழுமப் பணிப்பாளர் குகநாதன், கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ், ஒய்வுப்  பெற்ற கல்விப் பணிப்பாளர் முருகவேல், கோட்ட கல்வி அதிகாரிகள் அதிபர்கள் ஆசிரியர்கள் லிட்டில் எய்ட் அமைப்பின் பார்த்தீபன் என பலரும் கலந்துகொண்டனர்.    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here