உண்ணாவிரதத்தை கைவிட்டார் நளினி!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நளினி, தன்னுடைய ஐந்து நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைவிட்டுள்ளார்.

வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி தன்னை புழல் சிறைக்கு மாற்றும் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், சிறைத்துறை கண்காணிப்பாளர் வழங்கிய உறுதிமொழியையடுத்து அவர் தனது உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, சிறை அதிகாரிகளிடம் அளித்துள்ள மனுவில், உறவினர்கள் சென்னையில் இருப்பதாகவும், மகளுக்கு திருமண ஏற்பாடுகளை செய்ய ஏதுவாக புழல் சிறைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

இதனையடுத்து குறித்த மனுவிற்கு சிறை நிர்வாகம் எவ்வித பதிலும் வழங்காத நிலையில், புழல் சிறைக்கு மாற்றும் வரையில் தான்  உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக நளினி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here