பதவிகளை இராஜினாமா செய்யும் மூன்று எம்.பிக்கள்

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவியை இராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டு எதிர்க்கட்சியின் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி தயாராகி வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

இதனிடையே கூட்டு எதிர்க்கட்சியின் வடமத்திய மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்கவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் வடமத்திய மாகாண முதலமைச்சர் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொலோன்னேவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனடிப்படையில், மாகாண சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் இவர்கள் மூவரும் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வார்கள் என அரசியல் தரப்புத் தகல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here