முதியவர்களுக்கு மகுடம் சூட்டி கெளரவிப்பு

பிரம்ம குமாரிகள் ராஜயோக நிலையத்தினால் தந்தையர் தினத்தினை முன்னிட்டு சிவன் முதியோர் இல்ல முதியவர்களிற்கான கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.

குறித்த நிகழ்வு, இன்றைய தினம் வவுனியா மாவட்ட பிரம்ம குமாரிகள் ராஜயோக நிலைய பொறுப்பதிகாரி திருமணியின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

சிவன் முதியோர் இல்லத்தில் வாழும் முதியவர்களுக்கு மகுடம் அணிவித்து கௌரவமளிக்கப்பட்டதுடன், சில கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.

இதேவேளை, நிகழ்வில் வவுனியா மாவட்ட பிரம்ம குமாரிகள் ராஜயோக நிலைய பொறுப்பதிகாரி திருமணி மற்றும் கைலைநாதன், முதியோர் இல்ல தந்தையர்கள், தாய்மார்கள் கலந்து கொண்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here