விபத்தில் காயமடைந்தவரை அடையாளம் காண உதவி கோரும் பொலிஸார்!

வத்தளை – மாபோல பாலத்திற்கு அருகில் விபத்தில் காயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒருவரை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களிடம் உதவியை கோரியுள்ளனர்.

கடந்த 11ம் திகதி இரவு இந்த நபர் வீதியில் சென்று கொண்டிருந்த போது வாகன விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளர்.

அவர் சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அந்த நபர் ஆபத்தான நிலையில் இருப்பதால், அவர் பற்றி தகவல்களை அறிந்து கொள்ள முடியாதுள்ளது.

சிகிச்சை பெற்று வரும் நபர் 5 உயரம் கொண்டவர் எனவும் சுமார் 45 முதல் 50 வயது மதிக்கத்தக்கவர் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here