46 ஆவது நாளாகவும் தொடரும் வவுனியா சுகாதாரத் தொண்டர்களின் போராட்டம்

நிரந்தர தொழில்வாய்ப்பினை வலியுறுத்தி வவுனியாவில் சுகாதாரத் தொண்டர்கள் முன்னெடுத்துள்ள கவனயீர்ப்புப் போராட்டம் 46 ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

வடமாகாண சுகாதார அமைச்சரினால் உள்வாங்கப்பட்டு வவுனியா மாவட்டத்தில் பல ஆண்டுகளாக சுகாதாரத் தொண்டர்களாக பணியாற்றி வந்தவர்கள் கடந்த 46 நாட்களாக தமக்கான நிரந்தர தொழில்வாய்ப்பினைக் கோரி போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

எனினும் எவ்விதத் தீர்வுமின்றி இன்றளவிலும் போராட்டம் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here