அனர்த்தங்களை தவிர்ப்பது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்

அனர்த்தங்களை தவிர்ப்பது குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்ற போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

நாட்டில் அனர்த்தம் ஏற்பட்டதன் பின்னர் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதனை விடவும் அனர்த்தங்களை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து அதிக சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.

அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டது.

மேலும், வெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்படுவதனை தடுப்பதற்கான வழிகளை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here