நம்பிக்கையில்லா பிரேரணையை மீளப்பெறுமாறு பரிந்துரை

வடமாகாண சபையின் தற்போதைய நிலை தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிரா மற்றும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு சமய தலைவர்கள் நேற்று கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோம சுந்தர பரமாச்சாரிய சுவாமி மற்றும் யாழ். ஆயர் ஆகியோரே குறித்த பரிந்துரைகள் அடங்கி கடிதத்தை அனுப்பி வைத்துள்ளனர்.

குறித்த கடிதத்தில் தமிழ் மக்களின் அரசியல் பலம் சிதைவடைவதற்கு இடமளிக்காமல் சம்பந்தப்பட்ட தரப்பினர் விட்டுக்கொடுப்புடனும் மற்றும் கடிதத்தில் உள்ள பரிந்துரைகளை ஏற்று உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன், ஆளுனரிடம் கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை மீளப்பெற்று அதனை உறுத்திப்படுத்த வேண்டும்,

குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட அமைச்சர்கள் மீண்டும் பணிகளை தொடர அனுமதிக்க வேண்டாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை குறித்த இரு சமயத்தலைவர்களும் சந்தித்து உரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here