பணிப்புறக்கணிப்பில் புகையிரத சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள்

புகையிரத சாரதிகள் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் இன்று (19) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.

ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு மற்றும் சம்பளப் பிரச்சினை முதலான பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியே இந்த பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள உள்ளதாக புகையிரத சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் போக்குவரத்து அமைச்சருடன், இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது, தமக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த நிலையில், குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத்தருமாறு வலியுறுத்தி நாளை நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் மேற்கொள்ள உள்ளதாக புகையிரத சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here