வடக்கு முதல்வர் விவகாரம்! காப்பகத்திலிருந்து ஆவணங்கள் திருட்டு

அலுவலகத்தின் காப்பகத்திலிருந்து ஆவணங்கள் திருடப்பட்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை நேற்றைய தினம் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கடந்த 14ஆம் திகதி ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள அமைச்சர்கள் குறித்த விசாரணை அறிக்கையின் மீதான தீர்மானத்தை அறிவித்தேன்.

எனினும், அன்றைய தினம் இரவு அலுவலகத்தில் நுழைந்த மர்ம நபர்கள், காப்பகத்திலிருந்த ஆவணங்களை திருடிச் சென்றுள்ளனர்.

மேலும், விசாரணைகள் நடைபெறும்போது, அந்தந்த திணைக்களங்களில் இருக்கின்ற அதிகாரிகள்தான் எமக்குச் சாட்சியமளிக்க வேண்டியிருக்கும்.

எனினும், விசாரணையை எதிர்நோக்கியுள்ள அமைச்சர்கள் அங்கு இருக்கின்ற போது சாட்சியமளிக்க அதிகாரிகள் அச்சம் கொள்வார்கள். எனவேதான குறித்த இருவருக்கும் விடுமுறை அறிவிப்பை விடுத்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here