வளர்ப்பு நாய் வளர்க்கும் யாழ். மக்களுக்கு அறிவித்தல்

யாழ். மாநகர சபை எல்லைக்குட்பட்ட நாவாந்துறைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு விசர் நோய்த் தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று(19) முதல் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்படி, இன்று திங்கட்கிழமை முற்பகல்-09 மணி முதல் 11 மணி வரை பழம் வீதி, ஆறுகால்மடத்திலும், முற்பகல்-11 மணி முதல் பிற்பகல்-01 மணி வரை ஆறுகால்மட சனசமூக நிலையத்திலும், பிற்பகல்-02.30 மணி வரை 04 மணி வரை செழியன் வீதியிலும், 20 ஆம் திகதி முற்பகல்-09 மணி முதல் 11 மணி வரை புதிய குடியிருப்பு சனசமூக நிலையத்திலும், முற்பகல்-11 மணி முதல் 01 மணி வரை அராலி வீதி மானிப்பாய் ஓட்டுமதத்திலும், பிற்பகல்-02.30 மணி முதல் பிற்பகல்-04 மணி வரை ஆர்.சி.பாடசாலையடி நாவலர் வீதியிலும்,

நாளை(20) முற்பகல்-09 மணி முதல் 11 மணி வரை புதிய குடியிருப்பு சனசமூக நிலையத்திலும், முற்பகல்-11 மணி முதல் பிற்பகல்-01 மணி

வரை அராலி வீதி மானிப்பாய் ஓட்டு மடத்திலும், பிற்பகல் -02.30 மணி முதல் 04 மணி வரை ஆர்.சி. பாடசாலையடி நாவலர் வீதியிலும்,

நாளை மறுதினம்(21) முற்பகல்-09 மணி முதல் 11 மணி வரை ஆசாத் வீதியிலும், முற்பகல்-11 மணி முதல் பிற்பகல்-01 மணி வரை முதலாம், இரண்டாம், மூன்றாம் குறுக்குத் தெரு நாவலர் வீதியிலும், பிற்பகல்-02.30 மணி முதல் 04 மணி வரை சேமக்காலை வீதி கென்டி வீதியிலும்,

22 ஆம் திகதி முற்பகல்-09 மணி முதல் 11 மணி வரை தபாற்கந்தோர் வீதி நாவாந்துறையிலும், முற்பகல்-11 மணி முதல் பிற்பகல்-01 மணி வரை சனசமூக நிலையம்- வசந்தபுரத்திலும், பிற்பகல்-02.30 மணி முதல் 04 மணி வரை நித்தியா ஒளி சனசமூக நிலையத்திலும்,

23 ஆம் திகதி முற்பகல்- 09 மணி முதல் 11 மணி வரியை சூரிய ஒளி சனசமூக நிலையத்திலும், முற்பகல்-11 மணி முதல் பிற்பகல்-01 மணி வரை சென். நீக்கிலஸ் சனசமூக நிலையத்திலும், பிற்பகல்-02.30 மணி முதல் பிற்பகல்-04 மணி வரை கோவில் ஒழுங்கை, நாவாந்துறையிலும்,

எதிர்வரும்-28 ஆம் திகதி முற்பகல்-09 மணி முதல் 11 மணி வரை நாவாந்துறை காதி அபூபக்கர் வீதியிலும், முற்பகல்-11 மணி முதல் 01 மணி வரை கண்ணாபுரம் சனசமூக நிலையத்திலும், பிற்பகல்-02.30 மணி முதல் 04 மணி வரை கண்ணாபுரம் சோலைபுரம் முதலாம், இரண்டாம், மூன்றாம் குறுக்கு வீதியிலும்,

29 ஆம் திகதி முற்பகல்- 09 மணி முதல் 11 மணி வரை கற்குளம் நாவாந்துறை வெள்ளாத்தெரு வீதியிலும், முற்பகல்-11 மணி முதல் 01 மணி வரை சிவன் பண்ணை சீனி வாசகம் வீதி சந்நிதியிலும், பிற்பகல்-02.30 மணி முதல் பிற்பகல்-04 மணி வரை கோணாந் தோட்டத்திலும், 30 ஆம் திகதி மேற்குறித்த அனைத்துப் பகுதிகளிலும் விலங்கு விசர் நோய்த் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது.

ஆகவே, குறித்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் தங்களது வளர்ப்பு நாய்களுக்குத் தவறாது தடுப்பூசியினை ஏற்றிக் கொள்ளுமாறு யாழ். மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here