வவுனியா – புளியங்குளத்தில் திருவள்ளுவர் சிலை திறந்து வைப்பு

வவுனியா – புளியங்குளம் இந்துக்கல்லூரியின் நுழைவாயிலுக்கு அருகில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை இந்திய துணைத்தூதர் ஆ.நடராஜனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த திறந்து வைப்பு நிகழ்வு இன்று காலை பாடசாலை அதிபர் ச.பரமேஸ்வரநாதன் தலைமையில் நடைபெற்றது.

இதில் விசேட விருந்தினராக திருவள்ளுவர் சிலையை நன்கொடையாக வழங்கிய தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம் கலந்து கொண்டிருந்தார்.

வவுனியா நிருத்திய நிகேதன நுண்கலைக்கல்லூரி மாணவர்களின் வரவேற்பு மற்றும் திருக்குறள் நடனம், பாடசாலை மாணவர்களின் திருக்குறள் – பாவோதல், பேச்சு போன்ற நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.இதன்போது, நிகழ்வுகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு இந்தியத்துணைத்தூதர் ஆ.நடராஜன் மற்றும் தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம் ஆகியோர் பரிசில்களை வழங்கி வைத்திருந்ததுடன், தொடர்ந்து விருந்தினர்களும் கௌரவிக்கப்பட்டனர்.இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன், வவுனியா வடக்கு வலயக்கல்வி பணிப்பாளர் வ.சிறிஸ்கந்தராஜா, வவுனியா தேசியக் கல்வியற் கல்லூரி பீடாதிபதி கு.சிதம்பரநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.    

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here