50 ஆவது நாளாகவும் தொடரும் இரணைதீவு மக்களின் போராட்டம்!

கிளிநொச்சி இரணைதீவு மக்களின் போராட்டம் இன்று 50 ஆவது நாளை எட்டியுள்ள போதும் தீர்வு கிடைக்காத நிலையில் தொடர்கின்றது.

தமது பூர்வீக மண்ணில் மீள்குடியேற்ற கோரி குறித்த பகுதி மக்கள் தொடர் போராட்டத்தினை ஆரம்பித்திருந்தனர். இந்த நிலையில் குறித்த போராட்டம் இன்று 50 ஆவது நாளை எட்டியுள்ளது.

மீள்குடியேற்றத்தின் பின்னர் குறித்த பகுதியில் தங்கி நின்று தொழில் புரிவதற்கு கடற்படையினர் அனுமதியளிக்காத நிலையில், இது குறித்து மக்கள் தொடர்ச்சியாக அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.மக்களின் கோரிக்கைகளை அரசு செவிமடுக்காத நிலையில் இரணைதீவு மக்கள் போராட்டத்தினை ஆரம்பித்திருந்தனர்.

இயற்கையாக கடல் வளத்தினை கொண்ட இரணைதீவில் தம்மை மீள்குடியேற்றம் செய்ய கோரி முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்திற்கு அரசியல்வாதிகள் ஆதரவு வழங்கியிருந்த நிலையில் தீர்வின்றி மக்கள் தொடர்ந்தும் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.குறித்த பகுதியில் தங்கி நின்று மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கும் வரை தாம் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

யுத்தம் காரணமாக குறித்த பகுதியை விட்டு வெளியேறியுள்ள மக்கள் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் இரணை மாதா நகர் என்ற கிராமத்தினை உருவாக்கி அங்கு குடியேறியிருந்தனர்.

குறித்த பகுதியில் குடியேறியிருந்த மக்களில் பெருமளவானோர் இரணைதீவில் மீள்குடியேறுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் அவர்களின் மீள்குடியேற்றம் அரசினால் தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here