அகில இலங்கை ரீதியில் வெற்றிபெற்ற மாணவிக்கு மன்னாரில் வரவேற்பு!

அகில இலங்கை ரீதியில் இடம் பெற்ற 501 தொடக்கம் 1000 வரையிலான மாணவர் தொகையை கொண்ட தமிழ் பிரிவு பாடசாலைகளுக்கு இடையே இடம்பெற்ற சமூக ,விஞ்ஞான போட்டியில் 2ஆம் இடத்தையும், அகில இலங்கை ரீதியில் 3 மொழிக்குமான சகல பாடசாலைகளுக்குமான சமூக விஞ்ஞான போட்டியில் 3 ஆம் இடத்தினையும் பெற்றுக்கொண்ட மன்னார் நானாட்டான் மகா வித்தியாலய மாணவி செலஸ்டின் அஜென்டினாவிற்கு இன்று பாடசாலையில் அமோக வரவேற்களிக்கப்பட்டுள்ளது.

குறித்த போட்டியில் கலந்து கொண்ட மன்னார் நானாட்டான் மகா வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி கற்கும் மாணவி செலஸ்டின் அஜென்டினா என்பவர் அகில இலங்கை ரீதியில் இடம் பெற்ற 501 தொடக்கம் 1000 வரையிலான மாணவர் தொகையை கொண்ட தமிழ் பிரிவு பாடசாலைகளுக்கு இடையே இடம் பெற்ற சமூக ,விஞ்ஞான போட்டியில் 2ஆம் இடத்தையும்,

அகில இலங்கை ரீதியில் 3 மொழிக்குமான சகல பாடசாலைகளுக்குமான சமூக விஞ்ஞான போட்டியில் 3 ஆம் இடத்தினையும் பெற்று பாடசாலைக்கும், நானாட்டான் கோட்டத்திற்கும் ,மன்னார் வலயத்திற்கும் ,வட மாகாணத்திற்கும் பெருமை தேடிக்கொடுத்துள்ளார்.

குறித்த மாணவியை பாராட்டி வரவேற்கும் வகையில் மன்னார் நானாட்டான் மகா வித்தியாலய பாடசாலை நிர்வாகம் ஏற்பாடு செய்த வரவேற்பு நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் பாடசாலையில் இடம்பெற்றது.

இதன் போது மாணவி செலஸ்டின் அஜென்டினாவிற்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டதோடு, பாடசாலை சமூகம் சார்பாக மாணவி கௌரவிக்கப்பட்டார்.

குறித்த கௌரவிப்பு நிகழ்வில் மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்தியன் உற்பட அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள்,பெற்றோர் என பலர் கலந்து கொண்டு குறித்த மாணவியை கௌரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here