அமைச்சரவைக் கூட்டங்களுக்கு செல்போன்களை கொண்டு வரத் தடை

அமைச்சரவைக் கூட்டங்களுக்கு செல்போன்களை எடுத்து வர வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்களுக்கு இன்று அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.

இது உத்தரவில்லை மாறாக அறிவிப்பு மாத்திரமே எனவும் ஜனாதிபதி செயலகத்தின் தகவல்கள் கூறுகின்றன.

சில அமைச்சர்கள், அமைச்சரவைக் கூட்டத்தின் போது செல்போன்களில் குறுந்தகவல்களை அனுப்பும் பழக்கத்தை கொண்டிருப்பதால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எது எப்படி இருந்த போதிலும் இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த அரசாங்கம் ஒன்றின் தகவல்களை எதிர்க்கட்சிக்கு வழங்க அமைச்சர் ஒருவர் தனது செல்போனை அமைச்சரவைக் கூட்டத்தின் ஆரம்பத்திலேயே செயற்பட வைத்து வந்துள்ளதாக கடந்த காலங்களில் தகவல்கள் வெளியாகி இருந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here