அரசியல்வாதிகளுக்கு வயது நிர்ணயிக்கப்பட வேண்டும்

ஒருவர் மக்கள் பிரதிநிதியாக இத்தனை வயது வரையே இருக்க முடியும் என்ற வயது எல்லை நிர்ணயிக்கப்பட வேண்டும் என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி இதனை கூறியுள்ளார்.

வயதான பல அரசியல்வாதிகள் அவர்களுக்கு பொருத்தமற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், சகல தொழில்களுக்கு ஒரு வயதெல்லை இருக்கின்றது. ஆனால் அரசியல்வாதிகள் அரசியலில் ஈடுபட வயதெல்லை இல்லாதது கவலைக்குரிய விடயம் எனவும் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here