ஊடகவியலாளரை அச்சுறுத்திய கோத்தபாய

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் கடத்திச் செல்லப்பட்டு கொடூரமான முறையில் தாக்கி தனது கை மற்றும் கால்களை உடைத்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு கோரி ஊடகவியலாளர் போத்தல ஜெயந்த இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம் மற்றும் மேலும் சில அமைப்புகளில் பிரதிநிதிகளுடன் சென்று போத்தல ஜெயந்த இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெள்ளை வேனில் கடத்திச் செல்லப்பட்டு தாக்கி வீதியில் போடப்பட்டிருந்த ஜெயந்த, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது தலைமுடி மெட்டையாக வெட்டப்பட்டு, தாடியும் மீசையும் வழிக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர் போத்தல ஜெயந்த நாட்டில் இருந்து வெளியேறி வெளிநாடு ஒன்றில் தஞ்சமடைந்தார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தன்னை அழைத்து “நடப்பதை பார்த்துக்கொள்” எனக்கூறி அச்சுறுத்தியதாகவும், அதற்கு அடுத்து சில தினங்களில் தன்னை வெள்ளை வேனில் கடத்திச் சென்று தாக்கி, கை, கால்களை உடைத்ததாகவும், தன்னை கடத்திச் சென்று தாக்கியமைக்கான பொறுப்பை ராஜபக்ச அரசாங்கம் ஏற்கவேண்டும் எனவும் போத்தல ஜெயந்த கடந்த 2015 ஆம் ஆண்டு ஊடகங்களிடம் கூறியிருந்தார்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here