ஊடகவியலாளரை தாக்கிய இராணுவ புலனாய்வாளர்கள் பிணையில் விடுவிப்பு

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இராணுவ புலனாய்வுப் பிரிவின் 6 உறுப்பினர்களை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று பிணையில் விடுவித்துள்ளது.

கீத் நொயார் வாராந்த ஆங்கில பத்திரிகை ஒன்றின் பிரதி ஆசிரியராக பணியாற்றிய போது கடந்த 2008 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி கடத்திச் செல்லப்பட்டார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்களை தலா 10 லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறு இதற்கு முன்னர் கல்கிஸ்சை மேலதிக நீதவான் லோச்சனா அபேவிக்ரம வீரசிங்க உத்தரவிட்டிருந்தார்.

சந்தேக நபர்களை மாதந்தோறும் இறுதி ஞாயிற்று கிழமைகளில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here