எரிவாயு கடையில் பாரிய தீ விபத்து

கொஸ்கம பிரதேசத்தின் கனங்பெல்ல சந்தியில் இரண்டு கடைகளில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு கடைகளில் ஒன்று எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை செய்யும் கடை ஆகும். மற்றைய கடை கட்டட பொருட்கள் விற்பனை செய்யும் கடையாகும்.

இந்த தீ விபத்தில் எரிவாயு கடையில் உள்ள சிலிண்டர்கள் வெடித்து சிதறுவதால் பாரிய ஆபத்து ஏற்படலாம் எச்சரிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்னர் விற்பனை நிலையத்திலுள்ள L.P ரக எரிவாயு சிலிண்டர் ஒன்று வெடித்து சிதறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திடீர் திடீரென வெடிப்பதனால் தீயை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு பிரிவு அதிகாரிகள் கடும் சிரமங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சலாவ இராணுவ முகாமிற்கு ஒரு கிலோ மீற்றர் தொலைவிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

கொஸ்கம பகுதியை அண்மித்த வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here