கடலரிப்புக்குள்ளாகும் யாழ். நெடுந்தீவு வடக்கு கரையோரம்

யாழ். நெடுந்தீவின் வடக்கு கரையோரப் பகுதிகள் மிக வேகமாக கடலிரிப்புக்கு உள்ளாகி வருவதாகவும், காளவாய் முனையில் இருந்து மாவிலித்துறை பிடாரியம்மன் தடுப்பணைகளை அமைத்து தருமாறு இந்த கரையோர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெடுந்தீவு வடக்கு பகுதியின் மாவிலித்துறைக்கு அருகில் உள்ள பிடாரியம்மன் கோவில் முதல் காளவாய் முனை வரையான பகுதியில் உள்ள கரையோரப்பகுதிகள் தினமும் கடலரிப்புக்குள்ளாகி வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கடலரிப்புக் காரணமாக கரையோரத்தில் இருந்த பல வீடுகள் சேதமடைந்துள்ளன.எனவே இந்த பகுதியில் கடலரிப்பை தடுக்கும் வகையில் பாதுகாப்பு அணைகள் அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை முன்வைத்த நிலையில் கடலரிப்பை தடுக்கும் வகையில் பாதுகாப்பு அணை அமைப்பதற்கென ஒருகோடியே அறுபது இலட்சம் ரூபா நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையிலும், வேலைகள் முன்னெடுக்கப்படாமல் நிதி திரும்பிச் சென்றுள்ளது.கடந்த 1990ஆம் ஆண்டு முதல் மிக வேமாக கடலரிப்பு இடம்பெற்று வருகின்றது என நெடுந்தீவு கடற்தொழிலாளர்கள் கூட்டுறவுச்சங்கங்களின் சமாசத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், கரையோரத்தில் மீன்பிடிப்படகுகளை கட்டுவதற்கும், நங்கூரமிடுவதற்கும் ஏற்ற வகையில் இறங்குதுறைகளை அமைத்து தருமாறும் அப்பகுதி கடற்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here