கட்டுநாயக்க விமான நிலையத்தில் மஹிந்தவின் மோசமான செயற்பாடு

அண்மையில் ஜப்பானுக்கு தனிப்பட்ட விஜயத்தில் ஈடுட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாடு திரும்பும் போது பெருந்தொகை பொருட்களை கொண்டு வந்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட நிறைகளையும் விட பெருந்தொகையான பொருட்களை விமானம் மூலம் கொண்டு வரப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சுமார் 1000 கிலோகிராம் எடை கொண்ட பொருட்களை மஹிந்த கொண்டு வந்துள்ளார். அவருடன் சென்ற ஏனையோரும் பாரிய அளவில் பொருட்களை இலங்கைக்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்காக எவ்வித மேலதிக கட்டணங்களையும் அறவிடுவதற்கு ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவன அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என ஊடகம் சுடட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறு கொண்டுவரப்பட்ட பொருட்கள் என்வென்பது தொடர்பில் தகவல் வெளியே செல்லாத வகையில் விமான நிலையம் மற்றும் சுங்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

நட்டத்தில் இயங்கி வரும் ஸ்ரீலங்கன் விமான சேவையின் உயர்மட்ட முகாமையாளர் பதவியில் ராஜபக்சர்களுக்கு நெருக்கமானவர்கள் செயற்படுகின்றார்.

இதன் காரணமாக ராஜபக்சர்களின் விமான பயணங்களின் போது இவ்வாறான விசேட கவனிப்புகள் மேற்கொள்ளப்படுவதாக கொழும்பு ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here