கரைதுரைப்பற்றில் மருத்துவ சேவைகளை பெற சவால்களை எதிர்நோக்கும் மக்கள்

முல்லைத்தீவு, கரைதுரைப்பற்று பிரதேசத்தில் உள்ள மக்கள் தமக்கான மருத்துவ சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு பல்வேறு சவால்களை எதிர்கொள்வதாக கவலை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் அப்பகுதி மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு, கரைதுரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் சுமார் 14,000இற்கும் மேற்பட்ட மக்கள் மீள்குடியேறி வாழந்து வருகின்றனர்.

இந்த பிரதேசத்தில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை, மூன்று பிரதேச வைத்தியசாலைகள், 2 சுற்றயல் கூறு வைத்தியசாலைகள், ஒரு பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் 10 தாய்சேய் பராமரிப்பு நிலையங்கள் உள்ளன.

இவற்றில் சேவையாற்ற வேண்டிய வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், மருத்துவ உதவியாளர்கள், தாதியர்கள் குடும்ப நல உத்தியோகத்தர்கள் என பெருமளவான வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இதனால் இங்கு சேவை பெறும் வகையில் செல்லும் நோயாளர்கள் பெரிதும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர் என தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறித்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு மத்திய மற்றும் மாகாண அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுப்பதுடன், தமது மருத்துவ தேவைகளைப் பெறுவதற்கான வழிவகைகளை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here