கிளிநொச்சியில் கோணாவில் பகுதியில் குடி நீர் பற்றாக்குறை: மக்கள் பாதிப்பு

கிளிநொச்சி – கோணாவில் கிழக்கு பிரதேச மக்கள் தங்களுக்கான குடிநீர் தேவைக்கு பாரிய நெருக்கடிகளை எதிர் கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் நிலவும் கடும் வறட்சியின் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகின்றது. இதன் காரணமாக மக்கள் நாளாந்த தேவைகளுக்கு குடிநீரை பெற்றுக்கொள்வவதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் உள்ள கோணாவில் கிழக்கு பிரதேச மக்கள் இவ்வாறான பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளனர்.

நீண்ட காலமாக இவ்வாறானதொரு பிரச்சினைக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கும் இப்பகுதி மக்கள், இருக்கும் ஒரேயொரு கிணற்றில் 350 குடும்பங்களுக்கும் மேல் பயன்படுத்தி வருவதாக கவலை தெரிவித்துள்ளனர்.

குறித்த கிணற்று நீரை முந்தியடித்து பெற்றுக்கொள்வதற்காக அதிகாலையிலேயே செல்ல வேண்டி உள்ளதாக அந்த பிரதேச மக்கள் கூறியுள்ளனர்.அத்துடன், சில சமயங்களில் நீர் முடிவடைந்ததும் அயல் கிராமத்திற்கு செல்ல வேண்டி ஏற்படுவதாகவும், கிணறு மீண்டும் உற்றெடுத்ததன் பின்னரே நீரை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் கவலை தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு குடிநீர் பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ள நிலையில் பிரதேச சபையினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டும் தீர்வு எட்டப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, கோணாவில் கிழக்கு மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here