குருகுலராசா சொல்வதை கேட்கவேண்டிய அவசியமில்லை!

வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து ஆளுநருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

அத்துடன், இரா.சம்பந்தன், முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் மதத்தலைவர்களுக்கு இடையில் பரிமாற்றிக்கொள்ளப்பட்ட கடிதத்தில் கூறப்பட்டுள்ளதை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“வடமாகான கல்வி அமைச்சர் குருகுலராசா இன்னும் பதிவியை இராஜினாமா செய்யவில்லை. அவர் விரைவில் இராஜினாமா செய்வார் என எதிர்பார்கின்றோம்”.

இதன் போது இராஜினாமா கடிதம் கொடுக்க போவதில்லை என குருகுலராசா தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டி ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பியிருந்தனர்.

இதற்கு பதிலளித்த மாவை சேனாதிராஜா “அவர் கூறுவதை கூறட்டும். அதை கேட்கவேண்டிய அவசியம் தமக்கில்லை” என கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here