கொள்ளுபிட்டி கடற்கரையிலிருந்து சடலம் மீட்பு

கொள்ளுப்பிட்டிய கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் யுவதியின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வென்னப்புவ சால்ஸ் விலியம் மாவத்தையில் வசித்த 25 வயதான யுவதி ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த யுவதி கடந்த 15ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த நிலையில் அவரது சடலம் கொள்ளுப்பிட்டி கடலில் கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த வியாழக்கிழமை பிரத்தியேக வகுப்புக்காக கொழும்புக்குச் செல்வதாகத் தெரிவித்து வீட்டிலிருந்து சென்ற தமது மகள் மாலையாகியும் வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து, யுவதியின் பெற்றோர் உடனடியாக வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில், மேற்கொள்ளப்பட்ட தேடல் நடவடிக்கையின் போது குறித்த யுவதி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, தமது மகளுக்கு தற்கொலை செய்வதற்கான காரணங்கள் எதுவும் இருந்திருக்கவில்லை என்றும் இந்த மரணத்துக்கான காரணத்தை புரிந்து கொள்ள முடியாதுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here