கொழும்பில் போதைப்பொருளுடன் இருவர் கைது

3 கிலோ ஹசீஸ் போதைப்பொருளுடன் கொழும்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த போதைப்பொருளை மோட்டார் சைக்கிளொன்றில் கொண்டு சென்ற போது ஹிங்குருகடை சந்திப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இந்த இருவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஹசீஸ் போதைப்பொருளின் பெறுமதி 2 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here