கோப்பாயில் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு கொழும்பில் விற்றவர் கைது!

யாழ்ப்பாணம், கோப்பாய் பிரதேசத்தில் உள்ள வங்கி அதிகாரியின் வீட்டில் 12 இலட்சம் ரூபா பெறுமதியான 26 பவுண் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட இரு சந்தேகநபர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபலமான திருடர்கள் என கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர்கள் வேறு ஒரு கொள்ளை சம்பவம் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டிருந்ததுடன் சில தினங்களுக்கு முன்னர் சிறையில் இருந்து விடுதலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது பிரதான சந்தேகநபர் கொள்ளையிட்ட தங்க ஆபரணங்களை கொழும்பில் உள்ள நகை கடை ஒன்றில் விற்பனை செய்துள்ளதுடன், அந்த பணத்தை கொண்டு இரண்டு மோட்டார் சைக்கிள்களை கொள்வனவு செய்துள்ளார்.

மேலும், தனது மனைவியுடன் கொழும்பில் உள்ள பிரலமான துணிக்கடையில் ஒரு இலட்சத்து 85 ஆயிரம் ரூபா பெறுமதியான ஆடைகளை கொள்வனவு செய்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சந்தேகநபர் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பும் வழியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் திருடிய தங்க ஆபரணங்களை விற்று கொள்வனவு செய்த பொருட்களையும் 97 ஆயிரம் ரூபா பணத்தையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here